பக்கம்:முத்துச் சிப்பி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 4 3

உயிருடன் இருந்தால் அவளைப் புரிந்து கொண்டிருக்க லாம்’ ’ என்றார் .

பூரீதரன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவ ருடைய மெளனம் வேதாந்தத் துக்கு அச்சத்தைக் கொடுத்தது. சொல்லத் தகாததைச் சொல்லிக் கேட்கத் தகாததைக் கேட்டு விட்டோமோ என்னவோ என்று பயந்தார். பிறகு ஏதாவது ஒன்றைப் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில், டாக்டர் : நான் கூறியதில் தவறு இருக்கலாம். எனக்குப் பிறகு காமாட்சியின் தனிமையைப் பற்றி நினைத்துத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அவள் தனியாக இத்த உலகததில் தன் வாழ்க்கையை எப்படி நடத்து வாள் என்கிற வேதனை தாங்காமல் உங்களை வந்து இப்படிக் கேட்கிறேன். அந்த வேதனை என்னை அல் லும் பகலும் நிம்மதியை இழக்கச் செய்து அவதிக்கு ஆளாக்கி விட் டிருக்கிறது . அதிலிருந்து மீண்டு, சாகும் நா. களி லாவது நிம்மதியுடன் போக வேண்டும் என்ற ஆவலி னால் உங்களைத் தேடி வந்தேன் என்றார் வேதாந்தம் பட படக்கும் குரலில் .

வயோதிகத்தினால் ஆட்டம் கண்டிருந்த அவர் உடல் மேலும் நடுங்கியது. நிலை கொள்ளாமல் தவித் தார்.

பிரீதரன் புன்முறுவலுடன் வேதாந்தத்தின் கரங் களைப் பற்றிக் கொண்டார். பிறகு நிதான மாக, பதட்ட மடையாதீர்கள். நீங்கள் கூறிய தில் எ துவுமே தவறில்லை. காமாட்சி தனியாக இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை தான் ஒப்புக் கொள்ள மாட் டேன் . படித்துப் பட்டம் பெற்று. அறிவும் திறமையும் ஒருங்கே அமைந்தவள் உங்கள் மகள். அவளுடைய தொழில் ஒன்றே அவளுக்குத் துணையாக இருக்கிறது. அப்படி அவள் ஒன்றும் சிறு பிராயத்தவள் இல்லை.