பக்கம்:முத்துச் சிப்பி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

காமாட்சிக்கு வயது முப்பது இருக்காதா?’ என்று கேட் டார்.

  • ... I

"ஆமாம்’ ’ என்கிற பாவனையில் தலையை அசைத் தார் வேதாந்தம்.

'தன்னுடைய மறுமணத்தைப் பற்றி அவள் ஏற் கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பாளே, இவ்வளவு நாட்கள் அதில் விருப்பம் செலுத்தாமல் இருக்கும் போதே அவளுடைய மனம் உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டுமே... ' .'

வேதாந்தத்துக்கு அவர் மகளின் குணச்சிறப்புகளைப் பற்றி பிறத்தியார் கூற வேண்டி இருந்தது. வரும்போது அவரு ட ன் கூட இருந்த அதைரியம், அவநம்பிக்கை. பலஹlனம் யாவும் பறந்து போய்விட்டன. ஒருவிதமான அசட்டுச் சிரிப்புடன் அவர் பூரீதரனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காரில் போய் உட்கா ர்ந்தார் .

28. சலனம்

யோசனை கேட்க வந்தவரின் மனசில் தெளிவை ஏற்படுத்தினார் பூரீதரன். வேதாந்தத்தின் கார் சென்ற வுடன் சிறிது சிறிதாக அவர் மனம் இருள ஆரம்பித்தது. மனம் பல விதமான எண்ணங்களை அசை போட ஆரம் பித்தது.

காமாட்சியின் வருங்காலத்தைப் பற்றி வேதாந்தம் கவலைப் பட்டுக் கொண்டு வந்து போனதை நினைத்த வுடன் அவர் மனக் கண் முன் பவானி வந்து நின்றாள். சலனமற்ற அவள் முகபாவத்திலிருந்து அவரால் எதுவுமே கண்டு பிடிக்க முடியவில்லை. மலையிலிருந்து குதித்துப் பெருகும் ஆறு, சமவெளியில் வெகு நிதான