பக்கம்:முத்துச் சிப்பி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.47

வுக்குத் தம் மகளைப் பற்றிக் கவலை இருக்காதா?’ என்று நினைத்துக் கொண்டான்,

மனத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த உளைச்சல் முழுவதும் நீங்கப் பெறாதவராக வேதாந்தம் மாலை ஆறு மணிக்கு மேல் தம் வீட்டுக்குக் கிளம்பினார்.

29. குழந்தையின் குரல்

காரில் வந்து இறங்கிய வேதாந்தம் வாசல் வராந்தா வில் இருந்த மாடிப்படிகள் வழியாக ஏறி மாடியை அடைந்தார். அங்கு கிடந்த சோபா ஒன்றில் சாய்ந்து மின் விசிறியைச் சுழல விட்டுப் பெரு மூச்சு விட்டார் அவர். கடந்த சில வருவுங்களாக மனதில் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களுக்கு விடுதலை அளித்த நிம்மதி அவர் நெஞ்சில் நிறைந்திருந்தாலும், கூடவே ஒரு காரணமற்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது.மாலையோ, நாளையோ காமாட்சி, டாக்டர் பூரீதரனைச் சந்தித்தால் அவர் தன்னைப் பற்றிக் காமாட்சியிடம் ஏதும் கூறிவிடுவாரோ என்று அஞ்சினார். இந்தச் செய்தியை முன்னாடியே காமாட்சியிடம் கூறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றவே அ.பெ சிரமாக மாடியிலிருந்து கீழே வருவதற்குக் கிளம்பினார்.

அப்போது, கீழேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறந்து சில நாட்கள் ஆகியிருக்க வேண்டும். குவா குவா’ என்ற அந்த ஒலி இன்பமாக அவர் செவிகளில் வந்து விழுந்தது. 'யாரேனும் உறவினர் கள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே . என்று நினைத்தார்.

இதற்குள் கீழே இருந்து அவர் மகளின் குரல் தெளி

வாகக் கேட்டது.