பக்கம்:முத்துச் சிப்பி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி, அவர்கள் வீட்டுக் கார், வேலையாட்கள், குழந்தை சுமதி, எல்லோரும் அவள் மனக்கண் முன்பு ஆடி அசைந்து தோன்றினர். அந்த வீட்டில் இவள் யாராக மதிக்கப்படுவாள்?

நாகராஜனின் அருமைத் தங்கையாகவா? மஞ்சளும் குங்கு முமாக இருந்த போது அளித்த மதிப்பை மன்னி கோமதி இப்பொழுதும் இவளுக்கு அளிப்பாளா? யார் கண்டது?

.

ந்ேதாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு தடவை பவானி 'மைய விட்டுக்குப் போயிருந்தாள். கல்யாணமாகிப் புக்ககத்தில் போய் ஆறு மா சங்கள் குடித்தனம் பண்ணி விட்டு வருகிறவள். மனசிலே எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்ச்சிகள் நிறைந்து இருந்தன. யாரிடமாவது தன் வயசுக்கு ஒத்த பெண்ணி ம் அவைகளை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத் துடன் வந்தாள். கோமதி அவளைவிட வயசில் இரண்டு வருஷங்கள் மூத்தவள். அவளும் புதிதாக மணமாகி வந்திருப்பவள்தான். இருவரும் மனம் விட்டு எவ்வளவோ அந்தரங்கமாகப் பேசி இருக்கலாம்.

பவானி வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு விருவிரு வென்று ஸ்ளே போய் விட்டாள் கோமதி. அவள் சுபாவம் அப்படி.

"கோமு!கோமு 1 இதோ பார், யார் வந்திருக்கிறார் கள்?' என்று நாகராஜன் அவளைப் பல முறைகள் அழைத்தான்.

கோமதி அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்தாள்.

'நான்தான் பவானி வந்ததை அப்பொழுதே பார்த் தேனே. இதற்குப் போய் இவ்வளவு அமர்க்களம் பண்ணுவானேன்?’’ என்று சூள்'

கொட்டினாள் கோமதி.