பக்கம்:முத்துச் சிப்பி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 8

'சொக்கம்மா! குழந்தை அழுகிறது பார். கொஞ்சம் தொட்டிலை ஆட்டு. இதோ பாலைப் புட்டியில் ஊற்றிக் கொண்டு வருகிறேன்' என்றாள்.

வேதாந்தம் வியப்பும் திகைப்பும் அடைந்தவராக மாடிப்படிகளில் சற்று வேகமாகவே இறங்கிக் கீழே வந்தார். கூடத்துக்கு அடுத்தாற் போல் இருக்கும் காமாட்சியின் அறையில் ஒரு "ஸ்டாண்டு தொட்டில் ருந்தது. அதைச் சுற்றிக் கொசுவலை கட்டியிருந்தது. தொட்டிலின் அருகில் காமாட்சி ஒரு சிறு பெஞ்சியின் மீது உட்கார்ந்து குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தா ள்.

வேதாந்தம் தம் மகளின் அருகே வந்தார். மிகவும் அதிசயத்துடன் ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பதைப் போல் தொட்டிலுக்குள் குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே, என்ன அம்மா இது? என்று தம் மகளைப் பார்த்துக் கேட்டார்.

'குழந்தை அப்பா...... என்றாள் காமாட்சி. *அது தெரிகிறது. இது யார் குழந்தை அம்மா? ' என்று கேட்டார் ஆச்சரியத்தால் தம் கண்கள் மலர.

'நம் வீட்டுக் குழந்தை அப்பா. இனிமேல்

இவளுக்கு இந்த வீட்டிலே சொந்தம் உண்டு' என்றாள் கா மாட்சி.

வேதாந்தம் அ ரு கி ல் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

'அம்மா, காமாட்சி. கொஞ்சம் எனக்குப் புரியும் படியாகத் தான் சொல்லேன். மூக்கும் விழியுமாக சந்திர பிம்பம் போல இருக்கும் இந்தக் குழந்தை பிறந்தவுட னேயே பெற்றவர்களை இழந்த துர்பாக்கியசாலியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!