பக்கம்:முத்துச் சிப்பி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

தொட்டிலில் இருந்த குழந்தைப் பாலை பருகிய வுடன் அப்படியே அயர்ந்து துரங்கி விட்டது. அதன் வாய் அருகே கசிந்திருந்த பாலை மெதுவாகத் துடைத்து விட்டு, மேலே கட்டி இருந்த கொசுவலையை அவிழ்த்துத் தொங்க விட்டாள் காமாட்சி. பிறகு தன் தகப்பனாரின் எதிரில் வந்து உட் கார்ந்து கொண்டாள்.

"அப்பா ! இந்தக் குழந்தை பிறந்து இன்று பதினோரு நாட்கள் ஆகின்றன. இன்று பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் இதற்கும் இதன் தாய்க்கும் சம்பந்தம் இருந்தது. பிறகு அந்த சம்பந்தம் நீங்கி விட்டது. இனி மேல் நான்தான் இந்தக் குழந்தைக் குத் தாய்' என்றாள். இதைக் கேட்ட வேதாந்தத்தின் உள் ளம் பரபரப் படைந்தது.

'ஏனம்மா! குழந்தையின் தாய் இறந்து விட்டாளா? தகப்பன் குழந்தையைக் கவனிக்கவில்லையா? வேறு உற்றார் உறவினர் இந்தக் குழந்தைக்கு யாரும் இல்லையா?

காமாட்சியின் கண்கள் கலங்கி இருந்தன. அன்று காலை ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனக் கண் முன்பு தோன்றின. அந்த "வார்டு'க்கு அவள்தான் டாக்டராக இருந்தாள். அவள் மேற் பார்வையில், பொறுப்பில்தான் நோயாளிகள், பிரசவித்த வர்கள் உள்ளே தங்கியிருக்கவும், வெளியே செல்லவும் முடியும்.

காலையில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று , பிரசவித்தவர்களில் வீடு செல்லவேண்டிய பெண்களைச் சீட்டு எழுதி அனுப்பிக் கொண்டிருந் தாள். அன்று அந்த விடுதியில் சுமார் பத்து பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெண்ணாக அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியே