பக்கம்:முத்துச் சிப்பி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சென்றனர். அன்புடனும், ஆசையுடனும் பெருமிதத் துடனும் அந்தத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங் களை அள்ளி அணைத்துச் செல்வதைக் காமாட்சி கவனித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

கடைசியாக ஒரு பெண் தயங்கித் தயங்கிக் குழந்தை யுடன் அவள் அருகில் வந்தாள்.

'ஏனம்மா! உன்னைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையா? உன் புருஷனின் பெயரென்ன?’ ’ என்று விசாரித்தாள் காமாட்சி. அவள் பதில் கூறு முன் தானே மேஜை மீது கிடந்த விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை கவனித்தாள். அதில் அவளுடைய புருஷனின் பெயரைக் காணவில்லை. வேலப்பன்-சகோதரன் என்கிற விவரம் மட்டுமே காணப்பட்டது.

'உன் அண்ணன் கூடவா வரவில்லை? என்று திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள். * அவர் என் அண்ணன் இல்லை அம்மா. அந்த சம யத்தில் நாதியற்றுக் கிடந்த என்னை ம ைமிரங்கி இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். தகவல் கேட்டவர்களுக்கு தன்னை என்னுடைய அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும். எனக்கு யாருமே இல்லை டாக்டர் அம்மா...'

சமூகத்தில் எந்த வெறியனுடைய ஆசைக்கோ பலி யான புத்தியற்ற பெண் அவள் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காமாட்சி. சமூகத்திலே பரவி இருக்கும் இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் மனம் சொல்லொணாத் துயரை அடைந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, * சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? எங்கே போகப் போகிறாய்?' ' என்று அவளை விசாரித்தாள்.

அந்தப் பெண் கண்ணிரை மாலை மாலையாக உ குத் தாள். கருவிலே அந்தக் குழந்தையை ஏற்ற விநாடியிலி