பக்கம்:முத்துச் சிப்பி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 I

ருந்து அவள் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த துயர மனைத்தும் கரைந்து கரைந்து கண்ணிராக பெருகியது.

'இந்தக் குழந்தை உனக்கு வேண்டுமா? அதை நீ சரியாக வளர்ப்பாயா?

அந்தப் பெண் தலை குனிந்து மெளனமாக நின்றிருந் தாள். காமாட்சியின் முன்பு நடைபாதைகளிலே, மதகு களின் ஒரங்களிலே, கடற்கரையின் மன லிலே பால் மனம் மாறாத மதலைகள் எறியப்பட்டும், கிடத்தப் பட்டும் இருக்கும் கோரங்கள் நர்த்தனம் புரிந்தன. கா பாட்சி சட்டென்று அவள் பக்கம் இரும்பி 'இந்தக் குழந்தை எனக்கு வேண்டும். தருகிறாயா என்று கேட்டாள்.

குழந்தையின் தாய் நன்றி நிறைந்த கண்களுடன் காமாட்சியை ஏறிட்டு ப் பார்த்தாள். பிறகு மெதுவாக அருகில் இருந்த மேஜை மீது குழந்தையைக் கிடத்தினாள். பத்து மாதங்களாக அது அவள் வயிற்றில் பெரிய சுமை யாக இருந்தது. அது அவள் கைக்கு வந்த பிறகு அதன் பாரத்தை அவளால் தாங்கமுடியவில்லை. தாய்ப்பாசம் தாயன் புகட்ட அந்த இடத்திலே காய்த்துவிட்டது. எல்லாமே ஒழுங்கான முறையிலும், நேர்மையிலும் இருந் தால்தான் பாசம், அன்பு, கடமை யாவும் தளிர் விடும். இல்லாவிடில் காய்ந்து சருகாக வேண்டியதுதான்.

"நான் போய் வருகிறேன் அம்மா’ என்று அந்தப் பெண் அவளிடம் வாயால் கூறி விடைபெறவில்லை. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்தும், பார்க்கும் பார்வையிலிருந்தும் காமாட்சி அவள் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதை உணர்ந் தா ள.

மேஜை மீது படுத்திருந்த குழந்தையின் பூப்போன்ற கன்னங்களில் அந்தப் பெண் ஒரு முத்தம் அளித்தாள்.