பக்கம்:முத்துச் சிப்பி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Σ 5 3

  • "ஆமாம், அம்மா ! என்ன வோ ஒரு பைத்தியம் மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு அலைந்துவிட்டு வந்தேன்.

எங்கே போய் இருந்திர்கள்?' '

வேதாந்தம் மத்தியானம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, பூரீதரன் கூறிய பதிலையும் சொன்னார்.

  • ' என்ன அப்பா இது? உண்மையிலேயே பைத்தியக் காரத்தனம் தான் செய்திருக்கிறீர்கள் . எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. என் மன சைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்

களே..."

'இல்லை அம்மா, சில மாதங்களாக நீ விளை யாட்டுச் சாமான்களை வாங்கி வருவதும், பிறர் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் என்னை என்னவெல் லாமோ யோசிக்கச் செய்து விட்டது...?

"" அதனால் எனக்கு மறுமணம் செய்து வைத்துக் குழந்தை குட்டிகளுடன் பார்க்க ஆசைப்பட்டீர்கள். அப்படித்தானே? என்றாள் காமாட்சி.

வேதாந்தம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.

'அப்பா!' என்று ஆசையுடன் அழைத்த அவள் அவர் அருகில் வந்து வற்றி உலர்ந்து போன அவர் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டாள் .

"இங்கே பாருங்கள்! அன்று உங்கள் மருமகன் என்னிடம், காமாட்சி! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்’ என்று அரற்றினார். அந்த ஏமாற்றம் என் உள்ளத்தைக் கல்லாக மாற்றி விட்டது. இனிமேல் நான் எதையும் எதிர்பார்க்கப் போவது மில்லை. ஏமாறப் போவது மில்லை. குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண்