பக்கம்:முத்துச் சிப்பி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 4

காண வேண்டிய இன்ப துன்பங்கள் அனைத்தையும் என் தொழிலில் பார்க்கிறேன். கட்டிய கணவனால் கைவிடப் பட்டவளின் துயரைப் பார்த்திருக்கிறேன். மகப்பேறு இல்லை என்று வருந்தும் தாயைப் பார்க்கிறேன் . பெற்ற மகவை இழந்து துடிக்கும் அன்னையைப் பார்க் கிறேன். இவர்களின் துயரங்களில் ஒர் அணுவையாவது து ைடக்கும் மகத்தான பேற்றை நான் அடைந்தால் போதும் ..

வேதாந்தம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் நிலை யில் தம் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண் டிருந்தார். உபதேசிப்பது தந்தையாக இருந்தால் என்ன? மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருந்தால் என்ன ?

'இன்று நீங்களும் நானும் சேர்ந்தே சாப்பிடலாம். தினம்தான் அப்படி முடிகிறதில்லை. அதோடு உங்கள் பேத்தி இனிமேல் விழித்துக் கொண்டு அழுவாள் . வாருங்கள்' ' என்று அழைத்தாள் காமாட்சி. வேதாந்தம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உள்ளத்து நிறைவைக் காண முடிந்தது.

30. காதல் அரும்பியது

(குழந்தை பாலுவுக்காகப் பவானி சென்னை வந்தாள். பசுமலையில் ஊரார் அவளைக் கண்ட விதமாகப் பேசி ஏசுவதைப் பொறுக்க முடியாமல் அவன் நற் பெயரெடுத்து, நல்வாழ்வு வாழவேண்டும் என்கிற எண்ணம் அவள் மனத்துள் எழுந்தது. பாலு சென்னை வந்த பிறகு படிப்படியாக அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. 'பசுமலையில் இருந்த பாலு வா