பக்கம்:முத்துச் சிப்பி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 5

இவன் 1’ என்று பெற்ற தாயே வியந்து போற்றும்படியாக அவன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். முன்னைப் போல அவன் இப்பொழுது சுமதியுடன் காரணமின்றிச் சண்டை பிடிக்க முடியாது. ஏனெனில், அவளும் இவன் வம்புக்கு வருவதில்லை. ஆனால், அவனால் மட்டும் அந்தச் சிறு சம்பவத்தை மறக்க முடியவில்லை. சுமதியின் பேரில் கோபித்துக் கொண்டு ஜெயறுரீயின் புஸ்தகத்தைக் கிழித்தவன் அல்லவா ?

அதன் பிறகு எத்தனையோ முறைகள் அவன் ஜெயழவியைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறான். அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியும் இருக கி 21 என். ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி பிரஸ்தாபித்து 'இப்படிச் செய்தது என் தவறுதான்' என்று அவளிடம் கூறிவிட வேண்டும் என்கிற ஆசை அவன் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்குப் போதிய துணிச்சலோ வயதோஏற்படவில்லை. அத்துடன் ஜெயபூரீ ராதாவைப்போல எல்லோருடனும் சகஜமாகப் பழகும் நிலையில் இல்லை. அதாவது எப்பொழுதும் ஒரு வித சங்கோஜம் அவளிடம் நிலைத் திருந்தது. சுமதியைத் தேடிக் கொண்டு அவள் அங்கு வரும்போதெல்லாம் பாலு இருப்பதைப் பார்த்திருக்கிறாள். நீண்ட அவள் கருவிழிகள் இரண்டும் சஞ்சலத்தால் சுற்றிச் சுழன்று அவனைச் சரியாகப் பார்க்க வி. ராமல் அடித்துவிடும். ஏதோ ஒரு வெட்கம், கூடவே ஒரு பயம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளும். அவள் அந்த இடத்தில் நிற்காமல் விறுவிறு என்று சுமதியைத் தேடிக் கொண்டு போய் விடுவாள்.

" என்ன இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருகிறாய் கூடத்தில் எதைப் பார்த்துவிட்டு இப்படிப் பயப்படு கிறாயாம்!' என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டே சுமதி கூடத்தை எட்டிப் பார்த்து விட்டு , "ஹே ஹே !