பக்கம்:முத்துச் சிப்பி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 56

பாலுவைப் பார்த்துவிட்டா இப்படிப் பயப்படுகிறாய்?"

என்று அவளைக் கேலி செய்வாள்

ஜெயபூரீக்கு மேலும் வெட்கமாகப் போய் விடும்.

"ஐயே! சும்மா இருடி அம்மா. நீ போடுகிற கூச்சல் எட்டுத் தெருவுகளுக்குக் கேட்கும்போல் இருக்கிறதே. இதற்குத்தான் இங்கே நான் வருகிறதில்லை .. ” என்பாள். சுமதிக்கு இவளுடைய நாணத்தைப் பார்த்து மேலும் இவளை நையாண்டி செய்யத் தோன்றும்.

'வந்தால் என்னவாம்! எங்கள் பாலு என்ன, நீ பயப்படும்படியாக அவ்வளவு மோசமாகவா இருக் கிறான்? செக்கச் செவேல் என்று ராஜா மாதிரி அவனும் அவன் கிராப்பும்! போடி பைத்தியக்காரி. வீண் வேஷம் போடுகிறாய்

இவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் ரசிப்பான் பாலு. மெதுவாக பூமி அதிராமல் மென்னடை போட்டுக் கொண்டே சற்று முன் வந்த சுந்தரியின் முக லாவண்யத் தில் அவன் தன்னையே மறந்திருப்பான். உலகத்தில், எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள். அவனுடன் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள் இப்படி ஒரு மென்மை, இம்மாதிரி ஒர் அடக்கம், இம்மாதிரி ஒர் அழகு அவர்களிடத்தில் அவன் காணவில்லை. காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் வயதை அவன் பூராவாக அடைந்திராவிடிலும் அவன் மனத்தே அரும்பி இருக்கும் அந்தக் காதல் நாளடைவில் மலர்ந்து மணம் வீசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான். அதை அந்த புனிதமான காதலை அவன் அம்பலப்படுத்த விரும்பவில்லை. தன் இதயத்துள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கவே விரும்பினான்.

ஜெயபூரீக்குத் தன் பாட விஷயமாகப் பல சந்தேகங் கள் எழும். பாலுவைக் கேட்டால் விளக்கித் தருவான்