பக்கம்:முத்துச் சிப்பி.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

என் பதும் தெரியும். இருந்தாலும் கேட்பதற்குத் துணிச்சல் இருக்காது ,

'சுமதி ! இதைப்பற்றி நீயே கேட்டுச் சொல்லி விடேன்’ ’ என்று சுமதியைத்தான் தொந்தரவு செய்வாள் அவள். ' ஏனோ அம்மா! உங்கள் இருவருக்கும் நடுவில் நான் வக்காலத்து வாங்க வேண்டு மாக்கும் ஊ ஹ- ம்! முடியாது தோன் கேட்க வேண்டும்?' என்று கூறி

இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் சுமதி.

இதற்குள் பவானி வீட்டில் இருந்தால், எங்கே அம்மா வந்தாய் ஜெயது'? என்று விசாரிப்பாள்.

'நீங்கள் சும்மா இருங்கள் அத்தை. அவளுக்குப் பாலு விடம் ஏதோ பாடம் கேட்க வேண்டு மாம்! "

'கேளேன் அம்மா. அங்கே கூடத்தில் தானே இருக் கிறான்?

தன் உள்ளத்தில் அரும்பியிருக்கும் காதல் அரும்பின் தேவதை இப்படித் திக்கித் திணறி அவதிப்படுவதைப் பார்க்க அவன் உள்ளம் சகிப்பதி ல்லை.

"என்ன அம்மா அது? என்று கேட்டுக் கொண்டே வந்து மேஜை அருகில் உட்கார்ந்து அவள் சந்தேகங் களை விளக்கு வான் பாலு. அப்பொழுது அந்தப் பெண்ணின் கண்களை அவன் எவ்வளவு தான் சந்திக்க முயன்றாலும் அந்த நயனத் தாமரைகள் பூமியை விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றுவிடும்.

  • புரிகிறதா? என்று கேட்பான்.
  • உ.ம்......”*

"எங்கே, திரும்பவும் நான் சொன்னதைச் சொல்

பார்க்கலாம்?' என்று கூறி மேஜை மீது கிடந்த புஸ்தகத்தை மூடி விடுவான் பாலு . அப்பொழுதாவது