பக்கம்:முத்துச் சிப்பி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அழைப்பு......!

எண்ணங்களும், சிந்தனைகளும் முடிவில்லாமல் ஏற்படும்போது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். பவானி இவ்விதம்தான் தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள். மனதுக்கு வேகம் அதிகம் என்று சொல் வார்கள். நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துச் சுழன்று ஒடும் காட்டாற்றைவிட எண்ணங்களுக்குவேகம்அதிகம். வாயு வேகத்தை விட மனோ வேகம் வலிமை வாய்ந்தது. பவானி ஒரு கண காலத்தில் கடந்துபோன நாட்களை நினைவு படுத்திக் கொண்டு, அவை எழுப்பும் எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தாள். வில்லைப் போல் வளைந்து நெற்றிக்கே ஒரு சோபையைத் தரும் புருவங்களைச் சுளித்து அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அழகிய நீண்ட அவள் கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

நாகராஜன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பி ற கு அமைதியான குரலில், "பவானி! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய் என் பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? உன்னைப் பல முறைகள் கேட்டும் நீ பேசா மல் நிற்கிறாயே!” என்றான்.

பவானியின் கண்களில் கண்ணிர் நிறைந்திருந்தது.

'அண்ணா! உன்னுடன் என்னை வரும்படிக் கூப்பிடு கிறாய். அவ்வளவுதானே? என்றைக்கும் ஒருவருடைய ஆதரவின் கீழ்தான் நான் வாழவேண்டும். இவை எல் லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணா...... In என்று சொல்லி முடிக்காமல் தேம்பிக் கண்ணிர் வடித் தாள.