பக்கம்:முத்துச் சிப்பி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அவள் தலை நிமிர்ந்து தன்னைப் பார்க்கக் கூடும் என் கிற ஆசை அவனுக்கு.

ஜெயழரீயின் முகத் தாமரையில் முத்து முத்தாக வேர்வைத் துளிகள் அரும்பி கன்னங்கள் சிவப்பேற கிடு கிடு என்று அந்தப் பதிலை ஒப்பித்துவிட்டுத் தலையைக் குனிந்து கொள்வாள்.

'அப்பாடா! இதற்கா இவ்வளவு பயம்?"

பாலு மேலும் அவளைப் பயப்பட வைக்காமல் அங்கிருந்து சென்று விடுவான்.

இவர்கள் உள்ளத்தில் அரும்பி இருக்கும் காதலைப் பற்றிச் சுமதிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

31 . உள்ளத்துக்கு வைத் தியன்!

ராதாவின் வாழ்க்கையில் எத்தனையோ மாறுதல் கள் நிகழ்ந்தன. திறந்த வெளியிலே சிறகடித்துப் பறக்கும் வானம்பாடியைப் போல அவள் தன் கல்லூரி நாட்களில் இருந்து வந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்i,ாள். படிப்பு முடிந்த பிறகு கூட அவள் படித்து வந்த கல்லூரி யோடு அவளுக்குத் தொடர்பு இருந்து கொண்டே வந்தது. கலை விழா, நாடகம், சொற் பொழிவு யாவற்றிலும் ராதா முதன்மையாக நின்று உழைத்து வந்தாள். அவளை மணந்து கொள்ள எவ்வளவோ வாலிபர்கள் தவம் கிடந்தார்கள். அழகும், படிப்பும், செல்வமும் நிரம்பிய அந்தப் பெண்ணிடம் அவர்களுக் கெல்லாம் ஒரு பிரமை, பூரீதரனும் அவளை நல்ல இடத் தில் வாழ்க்கைப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். படித்தவனாகவும் சொத்துள்ளவனாகவும் மருமகன் தேட இருந்தார்.