பக்கம்:முத்துச் சிப்பி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 I

செய்து கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடுவதைக் கூட நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன் அம்மா...' என் றார் அவர்.

'அடடா! உங்களுக்கு மருந்தை நிறுத்தினால் கிறு கிறுப்பு அதிகமாகி விடாதா? அண்ணாவுக்குத் தெரிந் தால் கோபித்துக் கொள்வாரே...... # I

சுவாமிநாதன் வறட்சியாகச் சிரித்தார்.

'கோபித்துக் கொள்ளட்டும். ஒரு தினம் இரண்டு தினங்கள் கோபம் வரும். அப்புறம் சரியாகி விடும். ராதா மேலும் பேசவில்லை. ரத்த அழுத்தம் உள்ள வ ரிடம் அதிகமாகப் பேசி அயர் வைத் தரக் கூடாது என்று நினைத்து அங்கிருந்து சென்று விட்டாள்.

பூரீதரன் அன்று பகல் வைத்தியசாலையிலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். என்றுமில்லாமல் அவர் அன்று ராதாவையும் தம்முடன் சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிடும் இடத்தை அடைவதற்கு முன் தபால்காரர் ராதாவின் பெயருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். கடிதத்தின் மேலுறையில் இருந்த முத்திரையில் "கல்கத்தா என்று இருப்பதைப் பார்த்த ராதாவின் உள்ளம் ஒரு கணம் மகிழ்ச்சியால் துள்ளியது. அவசரமாக மாடிக்குச் சென்று கடிதத்தைப் பார்த்தாள். முதல் வரியில் "அன்புள்ள ராதாவுக்கு” என்றிருந்தது. தன் வாழ்வில் அன்றே அன்பு உதயமாகி விட்டதாகக் கருதினாள் அந்தப் பேதை.

"இந்தக் கடிதம் உன்னை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தக் கூடும். நான் எவ்வளவோ பாவங்கள் செய் திருக்கிறேன். செய்யும் போது அவை அற்பமாக இருந் தன. அவை எனக்கு இன்பத்தையும் அளித்தன. ஆனால் அதன் விளைவுகள் இப்பொழுது பிரும்மாண்ட

மு. சி-17