பக்கம்:முத்துச் சிப்பி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.2

மாகப் பேய் உருக்கொண்டு என் முன் நிற்கும்போது நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். சுருங்கச் சொல்லி விடுகிறேன். நான் என்னை ஏமாற்றிக் கொண்டதல்லாமல், உன்னையும் ஏமாற்றிவிட்டேன் ராதா! நான் ஒரு கடன்காரன். அதுவும் அற்ப சொற்ப மான குற்றத்தை நான் செய்யவில்லை. என்னை முழு வதுமாக நம்பி என் காரியாலயத்தினர் அளித்த பெருந் தொகையைக் கையாடி விட்டேன். இன்னும் சில மணி நேரங்களிலே நான் சட்டத்தின் முன்பு நிற்க வேண்டி இருக்கும்......."

ராதாவின் கண்கள் இருண்டன. கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் மங்கி மறைந்து கொண்டே வந்தன. கல்கத் தாவில் பிரும்மாண்டமான தெருக்களில் மூர்த்தி கை விலங்கிடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவள் மனம் கண்டது. உயர்நீதி மன்றத்தில் தன் கணவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருப்பதையும் கற்பனை செய்து பார்த்தாள்.

பெண்ணின் மனத்தை மிரு துவான மலருக்கு உவமை யாகக் கூறுவார்கள். ஆனால் தாங்க முடியாத துயரம், நடக்க முடியாத சம்பவம், கேட்கத் தகாத சொற்கள் இவற்றை அவள் தாங்கியும் கேட்டும் பார்த்தும் அனு பவிக்கும்போது உறுதிவாய்ந்த கற்பாறையாக அவள் மனம் மாறிவிடுகிறது.

ராதா கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே அப்படியே உட்கார்ந்து விட்டாள். கீழே பூரீதரன் தம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடிக்கு வந்தார். நேராக ராதாவின் அறைக்கு ச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்,

கையில் கடிதத்துடன் எங்கோ பார்த்துக் கொண் டிருந்த அவளைப் பார்த்ததும் அருகில் சென்று என்ன