பக்கம்:முத்துச் சிப்பி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 63

அம்மா அது? யார் எழுதி இருக்கிறார்கள்? உன் புருஷன் செளக்கியம்தானே? என்று விசாரித்தார். அந்த விநாடியில் ராதாவின் உள்ளத்தில் பல யோசனைகள் தோன்றின. . இது நாள் வரையில் தன் கணவனைப் பற்றி அவரிடம் கூறாமலே இருந்துவிட்டு, திடீரென்று இந்தச் செய்தியைப் பற்றிச் சொன்னால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்க மாட்டார்?’ என்று ராதாவுக் குத் தோன்றியது. கையில் இ ருக்கும் கடிதமோ, நடக்கக் கூடாத விஷயத்தைத் தாங்கி இருக்கு ம கடிதம் . அதைப் பிறர் படிப்பதற்காகக் கொடுப்பதும் நல்லதல்ல. ஆத் திரப்பட்டுத் தான் தேடிக் கொண்ட வினையின் விளைவைத் தானே அனுபவிக்க உறுதி கொண்டாள் அந்தப் பேதை .

தன் மனப் பாரத்தை மறைத் துக் கொண்டு சட்டென்று அவர் பக்கம் திரும்பி, அவர்தான் எழுதி யிருக்கிறார் அண்ணா. இத்தனை நாட்கள் அவர் ஹிமா சலப் பிரதேசத்தில் இருந்தாராம். அங்கே "காம்ப்” சென்றிருந்தவருக்கு மலைக் காய்ச்சல் வந்து விட்டதாம் இப்பொழுது குணமாகி இருப்பதாக எழுதி இருக்கிறார்' " என்றாள்.

  • இது என்ன அம்மா வேலை? சாப்பாடு வேளை க் கில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு தேக ஆரோக்கியத்தையும் குறைத்துக் கொள்வது ஒன்று தான் லாபம். பேசாமல் வேலையை ராஜிநாமா செய்து விட்டு இங்கே வந்து விடச் சொல். நான் நல்ல வேலை யாகப் பார்த்துக் கொடுக்கிறேன்.

ராதா சரியென்று தலை யசைத்தாள். மறுபடியும் அவள் அண்ணாவின் முன்பு அவள் கணவன் ஒரு கெளரவ மனிதனாக வருவானா என்பது அவளுக்கே தெரியாது.

பூரீதரன் அங்கிருந்து சென்றதும் ராதா அக்கடி தத்தை மறுபடியும் படித்தாள். எவ்வளவோ மகளரவ