பக்கம்:முத்துச் சிப்பி.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மும், கண் ணியமும் வாய்ந்த மனிதருக்கு அவள் சகோதரி யாக இருந்தாலும், அவருடைய பெருங் குணங்கள் இவளை அடையவில்லை. சிப்பியின் வயிற்றில் முத்துக் கள் விளைகின்றன. பளபள வென்று மின்னும் கரு நாக மும் தன்னு ள நஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறது. வெறும் சிப்பியாயிற்றே, இதனுள் என்ன பிர மாதமாக இருக்கப் போகிறது என்று அதை நாம் உதாசீனம் செய்ய முடியாது. மென்மையும், பளபளப்பும் கொண்ட கருநாகத்தின் அழகை மெச்சி அதை அனைத்துக் டு காள்ளவும் முடியாது. நற்குணங்கள் ஒவ்வொரு வருக்கும் பிறவியிலேயே அமையவேண்டும்.

ராதா ஆரம்பத்திலிருந்தே தன்னைப் பற்றிப் பிறரிட ம் கூறாதவள். மூர்த்தியைப் பற்றியும் தன் தமை யனிடம் கூறவில்லை. தன் விரும்பம் போல் செய்து கொண்ட மணம் ஆயிற்றே; கணவரிடம் இருக்கும் குறை பாடுகளை அம்பலப்படுத் தினால் இகழ்ச்சியில் வந்து முடிந்து விடுமே என்கிற பலவீனம்தான் இதற்குக் காரண மாக அமைந்தது. இந்தப் பலவீனம் நாளடைவில் வளர்ந்து, எதையும் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் ஆற்றலை அவளுக்கு அளித்தது.

கடிதத்தை எடுத்துப் பத்திரமாகப் பீரோவில்

வைத்துப் பூட்டிய ராதா, அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் தோட்டத்துக்குள் சென்றாள்.

32. குற்றச்சாட்டு

கதையின் முதல் பாகத்தில் முக்கிய இடம் பெற்ற பசுமலை கிராமத்தைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். மப்பும் மந்தாரமும் நிறைந்த மத்தியான வேளை, கல்யாணராமனும், பார்வதியும் முன்னைவிட