பக்கம்:முத்துச் சிப்பி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 65

வயது சென்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. அன்று அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் நடந்தது. சாப்பாட் டுக்குப் பிறகு வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவரின் அருகில் வைத்து விட்டு உட்கார்ந்தாள் பார்வதி. கணவரிடம் வெற்றிலையை மடித்துக் கொடுத்துக்கொண்டே என க்கு என்னவோ இந்த மாதிரி தனியாக இருப்பது பிடிக்கவில்லை. எங்காவது நாலு ஊர்களுக்குப் போய் வரலாமே? என்று கேட்டாள்.

கல்யாணம் மெதுவாகச் சிரித்தார்.

'ஊர் ஊராகப் போகிற வயசா நமக்கு? தலையைக் காலை வலித்தால், முன் பின் தெரியாத ஊர்களில் உன்னையும் என்னையும் யார் கவனிப்பார்கள்?’ ’

' 'போகிற இடத்தில் நமக்கு வியாதி வரவேண்டு மா என்ன? முதலில் பட்டணம் போகலாம். அங்கே நம் மூர்த்தியையும், அவன் மனைவியையும் பார்த்துவிட்டு அப்புறம் எங்காவது போகலாம்.

கல்யாணம், பார்வதியை உற்றுப் பார்த் தார்.

'ஏன்? மூர்த்தியும் ராதா வும்தான் உனக்கு உயர் வாகப் போய்விட்டார்களா? ப வானியையும் பாலு வை யும் மறந்து விட் டாயாக்கும்? என்றார்.

'அவளை நான் மறந்தா போனேன்? வாரம் தவறி னாலும் பவானி எனக்குக் கடிதம் போடத் தவறுவ

தில்லையே! பாலு பெரியவனாக வளர்ந்து விட்டா னாம். பசு மலைக்கு வர வேண்டும் என்று சொல்லிக்

கொண்டிருக்கிறா னாம்...

  • அதெல்லாம் சரி. மூர்த்தியைப் பற்றி ஏழெட்டு மாசங்களாக ஒரு தகவலும் தெரியவில்லையே! அவன்