பக்கம்:முத்துச் சிப்பி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

ஹ-சம்..... ஈசுவரா!' என்று பெருமூச்சு விட்டார்

கல்யாண ராமன்.

சம்பந்தி விட்டார் இதை நமக்குத் தெரிவிக்க வில்லை பார்த்திர்களா? எனக்கு அப்பொழுதே தெரி யும். ரொம்பப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்திருக் கிறான். இவனை அவர்கள் மதிக்கமாட்டார்கள் என் பது எனக்குத் தெரியும். பெண்களின் சுபாவப்படி பார்வதி சம்பந்தி வீட்டார் மீது குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தாள்.

' கொஞ்சம் பேசாமல் இரு. தனக்கு இருக்கும் கஷ்ட சுகங்களைப் பிறரிடம் சொல்லி, அதை நீக்கிக் கொள்ள அவன் முனைந்திருக்க மாட்டான். டாக்ட ருக்கே இதைப்பற்றித் தெரிந்திருக்காது. தெரிந்திருந் தால் கூடப் பிறந்தவளுக்காகவாவது அவர் ஏதாவது செய்திருக்க மாட்டாரா? விட்டுக் கொடுப்பாரா?' '

"ஆமாம் தாயும் தகப்பனும் இருக்கிற மாதிரி வருமா இதெல்லாம்?' என்று சலித்தவாறு பேசினாள் பார்வதி. அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் பலனில்லை என்று தெரிந்த கல்யாணம் தாமே விவரங்களை அறிந்து வர ராமு வைத் தேடிப் போனார்.

ராமு கூறியவற்றைக் கேட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் அவர் அன்றே தபாலில் ரீதரனு க்கு இதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினார்.

33. அவள் செய்த பாக்கியம்

பிறருடைய வாழ்க்கையில் நேரிடும் இன்னல்கள் நம்மை அவ்வளவாக வருத்துவதில்லை. அப்படிச் சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அது நம் உள்ளத்தில் ஆழமாகப்