பக்கம்:முத்துச் சிப்பி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

தமையன் வாஞ்சையுடன் அவள் அருகில் வந்து நின் றான். ஆதுரத்துடன் அவள் கண்ணிரைத் தன் கையால் துடைத்தான்.

'அசடே! என் வீட்டில் உனக்குச் சாப்பிடச் சாதம் இல்லாமலா போய்விட்டது? எதையோ நினைத்துக் கொண்டு வருந்துகிறாயே. பேசாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு என்னோடு புறப்படு அம்மா' என்று அழைத்தான்.

கூடத்திலே கோமதி உட்கார்ந்திருந்தாள். கொல் லையில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து தனியாகவே, சுதந்திரமாக இருந்து வந்தவள். வீட்டுக்கு எஜமானி என்கிற எண்ணம் அவளுக்கு வளர்ந்து போயிருந்தது. அந்த வீட்டில் இன்னொருவர் சுதந்திரமாக வந்து தங்க வேண்டும் என்பதை அவள் விரும்பாதவள். தன்னுடைய புருஷனையும், குழந்தை சுமதியையும், தன்னையும்.தவிர அவளுக்கு வேறு ஒருவருமே தேவையில்லாமல் இருந்தது.

செழித்து வளர வேண்டிய கொழு கொம்பிலிருந்து பிடுங்கித் தரையில் எறிந்த மாதிரி பூங்கொடியாகிய பவானியைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்?

நாத்திக்கும், மதனிக்கும் என்றும் ஒத்துக் கொள் ளாது என்று நினைத்து, அதற்கேற்ப கதைகளையும், சம் பவங்களையும் கேட்டும் படித்தும் அந்த எண்ணத்தி லேயே ஊறிப் போயிருப்பவர்கள் நாம். நாத்தி என்ன பூவும் மணமுமாகவா அவள் இல்லத்தை நாடி வந்திருக் கிறாள்? அவள் எதிரில் ஒரு புதுப் புடவை உடுத்த முடி யுமா? அவள் பார்த்துக் கோமதி கணவனுடன் பேசி மகிழ முடியுமா? அவள் விடும் பெருமூச்சு நெருப் ை