பக்கம்:முத்துச் சிப்பி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

பதிவதில்லை; பூரீதரன் தம் கண்களால் எத்தனையோ துயரங்களைப் பார்த்தவர். எவ்வளவோ அவமானங் களைப் பற்றிக் கேட்டவர். ஆனால் அவரை அவை அவ்வளவாக வருத்தவில்லை.

அன்று வைத்திய சாலையில் அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டுக்குப் புறப்படும் போது அதை ஜே.பியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்ததும். தம் ஜே.பியில் இருந்த கடிதத்தைப் பற்றி மறந்து விட்டார். சாப்பிட்டு விட்டு ஒய்வு பெறும் போதுதான் காலையில் ஜே.பியில் வைத்த கடிதத்தைப் பற்றி நினைவு வந்து அதை எடுத்துப் படித்தார். அவர் முகபாவம், சட்டென்று மாறிக் கொண்டே வந்தது. மிகுந்த வேதனையுடன் அப்படியே சமைந்து உட்கார்ந்து விட்டார் அவர்.

விஷயம் முற்றிப் போகும் வரை அசட்டுத் தைரியத் துடன் தன்னிடம் யாவற்றையும் மறைத்து வைத்த ராதாவைக் குற்றம் சொல்வதா? இம்மாதிரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டவளை பற்றி என்ன சொல்வது?

விதியின் கொடூரமான பிடிக்குள் அகப்பட்டுத் தன் சகோதரி தவிப்பதைக் கண்ட பூரீதரன், அவளிடமிருந்து உண்மையை அறிய அவளைத் தேடிச் சென்றார்.

அவள் மிகவும் இளைத்திருப்பதை அன்றுதான் பூரீதரன் கவனித்தார். கையில் கடிதத்துடன் பரபரப் படைந்து காணப்பட்ட தமையனைக் கவனித்த ராதா ஒன்றும் பேசாமல் இருக்கவே, "ராதா! உன் புருஷன் வேலையில் இருப்பதாக என்னிடம் நீ சொன்ன தெல்லாம் பொய்தானே? என்று கேட்டார் வருத்தம் தொனிக்கும் குரலில்.