பக்கம்:முத்துச் சிப்பி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

வான எண்ணங்களையே வைத்திருப்பவர், யாரோ ஒருவன் புரிந்த குற்றத்திற்கு அவர் தலை குனிய வேண்டி இருந்தது. உண்மையிலேயே டாக்டர் பூரீதரன் தம் தலையைக் குனிந்து கொண்டார். நீதிபதியின் முன்பு மூர்த்தி தலை குனிந்தானோ இல்லையோ, பூரீதரன் இப் போது தம் வீட்டில் தலை குனிந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தார்.

ஆத்திரம் அடங்கியவுடன் பூரீதரன். 'இனிமேல் நான் என்ன அம்மா செய்ய முடியும்? விசாரணைக்கு முன் பாவது ஏதாவது செய்திருக்கலாம். விசாரணை யெல்லாம் முடிந்து விட்டதாம். குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டானாம் உன் புருஷன். தண்டனையும் சற்றுக் கடுமையாகத்தான் இருக்கும் என்று அவன் மாமா கல்யாணராமன் தகவல் விசாரித்து எனக்கு எழுதியிருக் கிறார். 'விஷயத்தை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்களே ! உங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை உங்களுக்கே தெரியாதோ?’ என்று கேட்டிருக்கிறார். என் செல் வாக்கை நான் உபயோகிப்பதா? பணக்காரர்கள் எல்லாம் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டே இருந்தால், நீதியின் முனை மழுங்க வேண்டியதுதான். அவன் தலை யெழுத்து! நீ செய்த பாக்கியம் இப்படி இருக்கிறது!’ ’ என்றார்.

ராதா சிலை மாதிரி நின்றிருந்தாள். அவள் எதுவுமே பேசவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அவள் இருந்தாள்.