பக்கம்:முத்துச் சிப்பி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தொழிலும் கடமையும்

  • பார்த்தா மூன்று லகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. பெற்றிராத பேறு மில்லை. எனினும் . நான் தொழிலிலேதான் இயங்கு கிறேன். ஆதலால் எப் போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்து கொண் டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்து கிறான்.

கீதையின் இந்த அரும்பெரும் உரை சுவாமிநாத னுக்கு மனப் பாடம். சுமார் இருபது, இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு பூரீதரனின் வீட்டை அடைந்த அவர் தம்முடன் பிர மாதமான முட்டை முடிச்சுக்க ள ஒன்றும் கொண்டு வரவில்லை. பிரம்பால் ஆன பெட்டி ஒன்றில் மாற்றிக் கட்டுவதற்காக வேட்டி இரண்டும் துண்டுகள் இரண்டுமே இருந்தன. பழனி ஆண்டவன் திருநீறு கமகமவென்று ஒரு பொட்டலத்தில் மணம்வீசிக் கொண்டு இருந்தது. சிறிய வால்மீகி ராமாயண புத்த கம் ஒன்றும், பகவத் கீதை மொழி பெயர்ப்பு ஒன்றும் இருந்தன. அப்பொழுது அவருக்கு வெள்ளெழுத்து ஆரம்

-- -

பமாகி விட்டதால் வெள்ளெழுத்துக் கண்ணாடியும் வைத்திருந்தார்.

அன்று அவர் தனியாகத் தான் வந்தார். இன்றும் தனியாகத்தான் இருக்கிறார். நாளை தனியாகத்தான் போகப் போகிறார். பூரீதரன் தம் இளம் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்த சொற்ப காலத்தைப் பார்த்துப் பிரும்மானந்தம் கொண்டவர் அவர். கணவன் மனைவி முப்பது வருடங்கள் இருந்து வாழ்ந்து காண வேண்டிய மன ஒற்றுமையை, அன்பை அவர்களிடம் மிகக் குறுகிய காலத்தில் கண்டவர். ராதா சிறு பெண்ணாக மிகச் சிறிய வளாக பாவாடை கட்டுவதிலிருந்து படுக் கைபோடு வது வரை அவர் துணையால், உழைப்பால் வளர்ந்த