பக்கம்:முத்துச் சிப்பி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

வள். ஜெயபூரீக்குப் பால் புகட்டியதே அவர்தான்.

அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள். தாயைப்

போன்ற குணங்களும், தந்தையைப் போன்ற கல்வி

அறிவும் அவளுக்கு ஏற்பட்டு வருவதை மிக மகிழ்ச்சி

யுடன் பார்த்தவர் கிழவர். இந்த மனிதர் தனக்கென்று

அந்த வீட்டில் ஒரு விதமான உரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டவர் அல்ல.

அவர் வந்து முதல் மாதம் முடிந்ததும், டாக்டர் பூரீதரன் அவரிடம் முப்பது ரூபாய்களை மாதச் சம்பளம் என்று சொல்லிக் கொடுக்கப் போனார்.

'உங்களிடம்தான் இருக்கட்டும்? தேவைப்பட்ட

போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விட் டார் சுவாமிநாதன் .

ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் சில நூறு ரூபாய் கள் வாங்கி எங்கோ ஆதரவு இல்லாமல் தவிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு அனுப்பி வைத்தார். பிறகு அவர் ஒன்றும் கேட்கவில்லை. பூரீதரன் மட்டும் சுவாமி நாதன் பேரில் பாங்கில் மாதா மாதம் பணம் கட்டி வந் தார். சில ஆயிரங்கள் அவர் பேரில் சேர்ந்திருந்தன.

சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் சுவாமிநாதன் ஒரு வரும் கூறாமலேயே அறிந்து கொண்டார்.

' என்ன ஐயா ஊரெல்லாம் பேசிக்கறாங்களே. நம்ப மூர்த்தி ஐயா ஏதோ தண்டாவில் மாட்டிக் கிட்டா

ராமே... ' என்று தோட்டக்காரன் ராமையா அவரை விசாரித்தான்.

'எனக்கு ஒன்றும் தெரியாதப்பா...' என்றார்

அவர். தமது கண்களில் கசிந்த கண் ணிரைத் துடைத்துக் கொண்டே.