பக்கம்:முத்துச் சிப்பி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

'இந்த மாதிரி கவுரவம் வாய்ந்த மனிதருக்கு வந்து வாய்த்தானே! எங்கே பார்த்தாலும் அவனைப் பற்றித் தான் பேச்சு' என்றார் புது சமையற்காரர்.

அப்புறம் கார் டிரைவர் அவரிடம் தன் மனத்தாங் கலை வெளியிட்டார். வைத்தியசாலை 'கம்பவுண்டர்’ வந்து கூறி அலுத்துக் கொண்டார்.

டாக்டர் மட்டும் ஏதும் கூறவில்லை. ஆனால் அவர் உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது சுவாமி நாதனுக்குத் தெரிந்து விட்டது.

ராதா தன் எதிரில் வரும் போதெல்லாம் சுவாமி நாதன் கோபமும், வருத்தமும் அடைந்தார். ஒரு பெண் ணால் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் விளைய வேண்டியிருக்க, அவமானம் நேர்ந்து விட்டதே என்பதுதான் அவர் வருத்தத்துக்குக் காரணம்.

அந்தக் குடும்பத்தின் நலன் ஒன்றிலேயே கருத் துடைய சுவாமிநாதனுக்கு மூர்த்தியைப் பற்றித் தெரிந்ததும், ஏதோ எக்கச் சக்கமாக நடக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்தவர் போல் வாய் திறவாமல் மெளனமாக இருந்தார்.

அவராகவே ஏதாவது கேட்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். 'எனக்கு இனிமேல் எதுவும் புதி தாகத் தெரியவேண்டாம் என்று சொல்வது போல் இருந்தது அவர் மெளனம்.

தோட்டக்கார ராமையா மட்டும், என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது? நம்ப ஐயா குணத்துக்கும். ராதா அம்மாவின் செல்வாக்குக்கும் இப்படி ஒரு தலை குனிவு ஏற்பட வேண்டுமா!' என்று அவரிடம் கூறி அங்கலாய்த்

தான.

'ராமையா! எனக்கு அப்பவே தெரியும். கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுகிற மாதிரி இந்தப்