பக்கம்:முத்துச் சிப்பி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74

பெண் தானாகத் தேடிக் கொண்ட வினை அப்பா இது. இனிமேல் சட்டியா பானையா மாற்றிக் கொள்வதற்கு? ஆயுள் பூராவும் அவதிப்பட வேண்டியது தான் * ".. ידת GBL

"ஐயா! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க. ராத அம்மா வளர நீங்க எவ் ௗ வோ கஷ்டப்பட்டீங்க. மனம் நிறைஞ்ச வார்த்தையா ஏதாவது சொல்லுங்க. பாவம்! பின்னாலாவது அந்தப் பெண் சுகமாக இருக்கட் டும்' என்றான் ராமையா. படித்த பெண் தவறி நடக்கமாட்டாள். அவள் சுதந்திரத்தில் தலையி டக் கூடாதென்று டாக்டர் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டார் அப்பா. பவானி அம்மாவை உனக்குத் தெரியாதா? அந்தப் பெண், பாவம் எப்படியெல்லாம் இருக்க வேண்டியவள். அவளுக்கு நல்ல முறையில் வாழ யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த வருஷம் படிப்பு முடிந்து விடுமாம். பாலுவும் படிக்கிறான். இனி மேல் அவர்களைப் பற்றிக் கவலை இல்லை.

அவர்கள் அந்த வீட்டின் உப்பைத் தின்று உடலை வளர்த்தவர்கள். ஆகவே தங்களுக்குள்ளேயே கு மைந்து போய் பேசிக் கொண்டார்கள். வெளியாரிடம் ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. வேலைக்காரர் களில் இப்படி ஒரு ரகம் உண்டு. நடக்காத விஷயங்களைக் கயிறு திரித்துக் கூறி கதை பேசுபவர்களும் உண்டு. இதில் எஜமானர்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயமும் அடங்கி இருக்கிறது.

பூரீதரனின் குடும்பத்தில் வேலை பார்ப்பவர் ஒவ் வொருவரையும் அந்தக் குடும்பத்தினர் மாதிரியே அவர் பாவித்து வந்தார். இதனால்தான் அவர்களிடையே நல்ல அபிப்பிராயமே நிலவி வந்தது.