பக்கம்:முத்துச் சிப்பி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. இருளுக்குப் பின் ஒளி

உள் ளத்துக் கும் வைத்தியம் அவசியம் என்று சுவாமி

நாதன் ராதா வி டம் கூறினார் அல்லவா? கடந்த சில மாதங்களாக, அவர் தம் மனத்தைப் புற விஷயங்களில் அதிகம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். கடலின் அலைகளை ப் ேப ல உ ல க த் தி ல்

நடக்கும் விஷயங்களுக்கு ஒய்ச்சல் ஒழிவு இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, பருவங்கள், பண்டிகைகள், உதயம், அஸ்தமனம் யாவும் இந்த உலகில் நடப்பவை. யார் இருந்தாலும் இல்லாவிடினும் அவற்றிற்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும். சுவாமிநாதன் . சதா ராம நாபத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். தாரக மந் திர மாகிய அந்த நாமம அவருக்கு உடல் வலிமையை அளிக்காவிடினும், உள் ளத்துககு ஒளியும் தைரியமும் அளித்து வந்தது. உட்காரும் போதும் நிற்கும் போதும், நட க்கும் போதும் ஹரே ! ராமா ! என்று அழைத்து ஆறுதல் அடைந்தார். உலகில் இருப்பவர்கள் யாவரினும் இனியனாகிய ஒருவன் அவர் 'ராமா!' என்று அழைத்த வுடன் தம் அருகில் வந்து நின்று ஏன்?’ என்று இதமாகக் கேட்பது போன்ற அமைதியை அவர் உள்ளம் அடைந் தது. அதனால் தான் மூர்த்தியைப் பற்றி அவர் கேள்விப் பட்டதும் அந்த உள்ளம் அதிகமாகத் துயர் அடைய வில்லை. ஹே ராமா! இதுவும் உன் செயல்தான் அப்பா என்று ஒரு வார்த்தையில் உள்ளத்து க்கு ஆறுதல் தேடித் தந்தார். இருந்தாலும் உ )ெ அ5 பந்தங்களிலிருந்து சாமானியமாக மனம் விடுதலை அடைவதில்லை. அந்தச் செய்தி அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. சில தினங்கள் வரையில் உட்காரும் சக்தியைப் பெற்றிருந்தவா அந்தச் சக்தியை யும் இழந்து விட்டார்.