பக்கம்:முத்துச் சிப்பி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

அதிகாலையில் எழுந்து பிறருக்குச் சிரமம் தராமல் தன் வேலைகளைத் தானே செய்து வந்த சுவாமிநாதன் அன்று விடிந்ததிலிருந்து தம் படுக்கையை விட்டு எழவே இல்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்த பூரீதரன் நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சுவாமிநாதன் இனி அதிக நேரம் இருக்க மாட்டார் என்பது தெரிந்து போயிற்று.

மெல்லக் கண்களைத் திறந்து தன்னைப் பார்க்கும் அவரைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?' என்று விசாரித்தார் பூரீதரன். r

கவேண்டாம். வேண்டியதை சாப்பிட்டு விட்டேன்...'

பூரீதரன் அவர் அருகில் தம் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.

உங்கள் ஒன்றுவிட்ட தங்கைக்குத் தந்தி அடிக்கவா? உங்கள் பணத்தை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்...'

சுவாமிநாதன் மிகுந்த வேதனையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

"அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ராதா வைக் கூப்பிடுங்கள்... திணறிக் கொண்டே பேசினார் அவர் .

ராதா ஏதோ குற்றம் புரிந்தவளைப் போல் அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள். நடுங்கும் தன் கரங்களால் அவள் மிருதுவான கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.

'அம்மா! இனிமேல் நீ நன்றாக இருப்பாய். உலகத் தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். இருளுக்கு அப்புறம் ஒளிதானே? நீ உன் புருஷனுடன்