பக்கம்:முத்துச் சிப்பி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

ஆனந்தமாக இருக்கும்போது நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவன் இனிமேல் திருந்தி விடுவான். எல்லோரும் சந்தோஷமாக இருப்பீர்கள்...'

சுவாமிநாதன் அதற்கு மேல் பேசவில்லை. அவர் வாய் உலக விஷயங்களைப் பேச மறந்தது போல் அசை யாமல் இருந்தது. அவர் முகத்தில் துயரம், துன்பம் ஒனறும் இல்லை. அசாதாரணமான ஓர் அமைதி. புன் ன கை நிரம்பி இருந்தது. சுவாமிநாதன் தம் கடமை களைச் சரிவரச் செய்த நிம்மதியில் அவர் இடையறாது துதித்து வந்த பூரீராமனது திருவடிகளை அடைந்து விட் டார்.

டாக்டர் பூரீதரனின் கண்களிலிருந்து அருவி போலக் கண்ணிர் வழிந்து கொண்டே இருந்தது. தேம்பியும் புலம் பியும் தன் சகோதரியை அனைத்தவாறு டாக்டர் வெளியே சென்றார்.

36. நம்பிக்கை

இல்ல மனசுடன் அன்று சுவாமிநாதன் செய்த ஆசியிலே அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட் டது . அவருடைய பிரம்புப் பெட்டி ராமாயணப்புத்தகம் மூக்குக் கண்ணாடி விபூதிப் பை யாவும் அவருடைய அறையிலே வைக்கப்பட்டன. அந்தக் கிழவர் எப்பொழுதோ தெரியாமல் காமிராவின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட போது எடுத்த போட்டோவைப் பெரிதாக்கி அறையில் மாட்டி வைத்தார்கள்.

பூரீதரனின் உள்ளமும் இனி முர்த்தி விடுதலை அடைந்து வந்து விட்டால் திருத்தி விடுவான் என்று சொல்லியது. ராதாவும் அவ்விதமே நம்பினாள்.

qд — 1 8