பக்கம்:முத்துச் சிப்பி.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.78

ஒரு நாள் மாலை பவானி டாக்டர் பூரீதரனின் வீட்டுக்கு வந்தாள். சமீபத்தில் அவள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டாள். அதை பூரீதரனிடம் கூறி ஏதாவது ஆலோசனை கேட்டுப் போகலாம் என்று வந்திருந்தாள் பவானி.

இடையில் அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் அறிந்தவள் அவள். எதிலும் அக்கறை காண் பித்துக் கொள்ளாத அவள் தமையன் நாகராஜன், திடும் என்று மூர்த்தியைப் பற்றி வீட்டில் வந்து கூறியதும் பவானிக்குப் பெரிதும் வருத்தம் ஏற்பட்டது. மூர்த்தியின் குணங்களைப் பற்றிப் படிப்படியாக அவள் நினைத்துப் பார்த்தாள். ஒருத்தியை மணந்து கொண்ட பிறகும் மாறாதவன் , அன்று அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டான்.

  • " கோவிலுக்கா போகிறீர்கள்? என்று அவன் கேட்டுச் சிரித்ததும், தன்னை யும் பாலுவையும் தொடர்ந்து டவுன் பஸ் ஸில் அவன் வந்ததும் பிறகு ஒரு நாள் சேஷாத்ரியுடன் அவன் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதையும், கடைசியாக ரயிலடிக்குவந்து தன்னிடம் நயவஞ்சகமாக விலாசம் கேட்டதையும் நினைத்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் பவானி.

இப்படிப்பட்டவனிடம் ஒர் அணுவளவு தான் பிசகி நடந்திருந்தாலும், என்னவெல்லாம் நேர்ந்திருக்குமோ என்கிற கலக்கம் அவள் மனத்தில் ஏற்பட்டது. ராதா விடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது . நாடகத்துக்கு அவள் டிக்கட் விற்க வந்தபோது இருந்த நிலைமையை யும் இப்பொழுது இருந்த நிலைமையையும் நினைத்துப் பார்த்து வருந்தினாள் அவள் . இதைப்பற்றி அனுதாபத் துடன் அவள் தன் மன்னி கோமதியிடம் கூறியபோது "ஆமாம், நீதான் அவளுக்காகக் கரைந்து போகிறாய்.