பக்கம்:முத்துச் சிப்பி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 9

நல்ல இடமாக டாக்டர் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத் திருக்க மாட்டாரா? எத்தனை பிள்ளைகள் கண் னியமாக, கெளரவமாக இல்லை. அவனுடன் சுற்றி அவள் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். விஷயம் மிஞ்சிப்போன பிறகு என்ன செய்ய முடியும்? அவனுக்கே கல்யாணத்தைப் பண் ணிவைத்தார். அப்புறமாவது புருஷனைக் கவனித்துக் கொஞ்சமாவது திருத்தி இருக்க லாம். ஒருத்தர் விவகாரங்களில் இன்னொருத்தர் தலை யிடக்கூடாது என்கிற நாகரிகம் புருஷன் மனைவி வரை யில் பரவி விட்டதாக்கும் ராதா அவன் போகிற வழிக் கெல்லாம் வளைந்து கொடுத்து அவனுக்கு உடந்தையாக இவளும் ஆடி இருக்கிறாள். அவள் அண்ணா கொடுத்த வைர வளையல்களை விற்கிற வரையில் அவளுக்கே தெரியவில்லை பார் ! என்று கோமதி ராதாவின் பேரில் குற்றத்தைச் சுமத்திப் பேசினாள்.

மன்னியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பவானியின் மனம் ராதாவுக்காக மேலும் இரங்கியது. அவளைத் தனிமையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்காக அவர்கள் வீட்டுக் குப்போய்ப் பேசுவதும் சிறந்த முறையாகப் பவானிக்குத் தோன்றவில்லை. ஆகவே சில நாட்கள் வரையில் சும்மா இருந்து விட்டாள். இடையில் சுவாமிநாதன் காலமாகி விட்டார் என் கிற செய்தி தெரியவந்தது. டாக்டரின் குடும்பத்தைத் தாங்கிவந்த பெரிய துரண் ஒன்று நிலை பெயர்ந்த மாதிரி இருந்தது அந்தச் செய்தி.

  • ராதா, ராதா என்று அவள்மீது உயிராக இருந் தார் அந்த மனிதர். அவள் சுகத்தோடு வாழ்வதை அவர் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை! பாவம்... ' என்று நாகராஜனும் கோமதியும் வருந்தி னார் கள் .