பக்கம்:முத்துச் சிப்பி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 O

கோமதி இப்பொழுது நோயாளி அல்ல. தன் குடும் பத்தைத்தானே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் ஏற்பட்டிருந்தது. அத்தை வராவிட்டால் நீ எப்பொழு தும் படுக்கையில்தான் இருந்திருப்பாய். நாத்திக்குப் பயந்துகொண்டு குடும்ப வேலைகளைக் கவனிக்கவே வலிவும் உற்சாகமும் உனக்கு ஏற்பட்டு விட்டது என்று கேலி செய்தாள் சுமதி.

"நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதும் உன் அத்தையால்தான். அதை மறந்து விடாதே என் றாள் கோமதி.

'என் சயன்ஸ் நோட்டுப் புஸ்தகம் எங்கே சுமதி நீ எடுத்தாயா அதை?' என்று கேட்டுக்கொண்டே வந் தான் பாலு.

நான் எதற்கப்பா அதையெல்லாம் எடுக் கிறேன்? நீ தானே நேற்று ஜெயபூரீயிடம் கொடுத்தாய் ! துரைக்கு மறந்துபோச்சு போலிருக்கு. அவ்வளவு மயக்கம் இப் பொழுதிலிருந்தே எ ன் றா ள் சிரித்துக்கொண்டே சுமதி.

பாலு சுமதியைக் கோபத்துடன் பார்த்தான்.

"எங்கே மறுபடியும் என்னைப்பற்றி குரங்கு மூஞ்சி பாலு என்று எழுதியிருப்பாயோ என் கிற சந்தேகம் வந்துவிட்டது!’ ’

பவானி இவர்கள் இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தவள் திடீரென்று, 'பாலு! நான் டாக்டர் பூரீதரனின் வீட்டுக் குப் போகிறேன். அப்படியே உன் நோட்டுப் புஸ்த கத்தை வாங்கி வருகிறேன’’ என்று கூறி விட்டுக் கிளம் பினாள்.

அவள் டாக்டர் வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச் சென்று கிடந்தது. முன் பிருந்த களையும், அழகும்