பக்கம்:முத்துச் சிப்பி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 I

அந்த வீட்டில் காணப்படவில்லை. கூடத்தில் ஒருவரும் இராமற் போகவே, பவானி இரண்டாங் கட்டுக்குச் சென்றாள்.

அங்கே உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும் அவள் திடுக் கிட்டுப் போனாள். இளமையின் எழிலோடு விளங்கிய அந்தப் பெண் இப்போது நிறம்மாறி இளைத் துப் போய் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் துயரம் ஏற்பட்டது.

'வாருங்கள். அண்ணா சற்றைக்கெல்லாம் வந்து விடுவார். உங்களுக்குப் பரீட்சை "பாஸ் ஆகிவிட்ட தாமே! டாக்டர் காமாட்சி நேற்று வந்திருந்தார். அவர் தான் சொன்னார். மேலே என்ன செய்யப் போகிறீர் கள்? என்று கேட்டாள் ராதா.

மனதுக்குள் குவிந்து போயிருக்கும் துயரச் சுமையை மறைத்துக்கொண்டு பேசும் ராதாவின் அருகில் உட் கார்ந்தாள் பவானி.

சிறிது நேரம் வரையில் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.

சுவாமிநாதன் போன பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை. பாவம், நல்ல மனு ஷர்...' என்று

அனுதாபம் தெரிவித்தாள்.

ராதா மள மளவென்று கண்ணிர் பெருக்கினாள் .

'நல்ல மனிதர் என்பதை நான் அன்றே புரிந்து கொண்டு, அவர் சொன்னபடி கேட்டிருந்தால் என் நிலையே வேறாக இருக்கும். அவரை நான் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. நம்மை வளர்த்த பாசத்தி னால் நம்மிடம் அளவுக்கு மீறிய சலுகை காண்பிக்கிறார், வேண்டாத விஷயங்களில் தலையிடுகிறார் என்று