பக்கம்:முத்துச் சிப்பி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

நினைத்து அவர் மீது எனக்கு வெறுப்பும் கோபமும்தான் அப்போது உண்டாயிற்று. '

பவானி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டி ருந்தாள்.

'இனிமேல் எனக்கு என்ன கெளரவம் இருக்கிறது? படித்த படிப்பும், மற்றவைகளில் இருந்த சாமர்த்தியமும் வீணாகிப்போன மாதிரிதான். நான் வெளியிலேயே போகிறதில்லை. வெறுமனே வேதாந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ட வானி லேசாகச் சிரித்தாள்.

"ராதா, எனக்கு விவரங்கள் யாவும் தெரியும். வெறுமனே வேதாந்தப் புத்தகங்களைப் படித்துவிட் டால் நீயும் நானும் ஞானிகள் ஆகிவிட முடியுமா? ஆசா பாசங்களை லவலேசமும் துறக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அன்று உன் கணவன் வைர வளை யல்களை விற்றதும் நீ வெகுண்டு அழுதாயாம், என்னு டைய பிறந்த வீட்டாரால் கொடுக்கப்பட்ட நகை ஆயிற்றே என்றாயாம். உன்னுடையது என்கிற அகங் காரம் உன்னை விட்டு மறையாமல் இருக்கும்போது வேதாந்த புத்தகங்களைப் படித்துவிட்டால் மட்டும் மனத்திலே தெளிவு வந்து விடுமா? எல்லோரும் ஞானிக ளாகவும், வேதாந்திகளாகவும் மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. கூடுமானவரையில் உலகத்தோடு ஒட்டிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ முடியும் ...'

பவானி தன்னைப்பற்றிய விவரங்கள் யாவும் அறிந் திருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் ராதாவுக்கு வெட்க மும் துயரமும் ஏற்பட்டன. ■

ராதா மனத்துக்குள் வருந்துகிறாள் என்பது தெரிந் ததும் பவானி பேச்சை வேறு வழிகளில் மாற்றினாள்.