பக்கம்:முத்துச் சிப்பி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.84

டாள். அதை ஊதி எரியச் செய்ய மாட்டாள் அவள் . நடந்து போன துயரங்களைப் பற்றி நினைப்பதும் அதை பற்றியே பேசுவதும் மனத்தை எவ்வளவு துாரம் கெடுத்து விடுகிறது என்பது உனக்குத் தெரியாது. பவானி தன் துயரங்களுக்கு ஒர் உருவம் கொடுக்க முயற்சிக்க வில்லை என்றார். ராதாவுக்குப் பவானியைப் பற்றிய செய்திகள் யாவுமே வியப்பை அளித்தன.

அதன் பிறகு பவானி ஊருக்குக் கிளம்புவதற்கு முன் பாக அவளுக்கு அவர்கள் வீட்டில் விருந்தளிக்க வேண் டும் என்று அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்.

பவானி, பசுமலைக்குச் செல்ல வேண்டும் என்கிற செய்தியை நாகராஜன் வீட்டில் யாருமே வரவேற்க வில்லை.

சர்க்கார் உத்தரவைப் பவானி நாகராஜனிடம் காண்பித்ததும் அவன் பெரிய குரலில், 'கோமதி இங்கே வாயேன். நீயும் மூட்டை முடிச்சுகளைக் கட்டு என்று

அழைத்துக் கூறினான்.

எதற்கு? எங்கே போவதற்கு என்று சொல்ல வில்லையே? இனிமேல் துரை மிஸஸ் இல்லாமல் வெளியே இளம்பமாட்டீர்களோ? என்று கேலி செய்தாள்.

உன் நாத்தனார் ஊருக்குக் கிளம்புகிறாளாம். அவள் இல்லாமல் நீ இந்த வீட்டில் இருந்தால் தலை சுற்றல், மயக்கம், அஜீரணம் எல்லாம் உனக்கு வந்து விடுமே! அப்பா ! உன்னோடும், உன் வியாதிகளோடும் மருந்துப் பட்டியல்களோடும் நான் பட்டபாடு எனக் கல்லவா தெரியும்?' என்று சொல்லிப் பெரிதாகச் சிரித் தான். என்ன அண்ணா இது? என்னால்தான் உலகமே நடக்கிற மாதிரி நீ பேசுகிறாய்?' என்று கேட்டாள் பவானி சிரித்துக் கொண்டே.