பக்கம்:முத்துச் சிப்பி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மான நர்ஸ்கள் கிடையாது. அங்கிருப்பவர்களுக்குப் பவானி தலைவியாகப் போகிறாள். என்ன அம்மா

பவானி? நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்று கேட் டார் பூரீதரன் .

எப்பொழுதுமே படபடவென்று பேசத் தெரியாத பவானி மிகவும் விநயமாக, உங்களுக்கு எல்லாம் தெரி

யும். நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கூறினாள்,

டாக்டர் பூரீதரன் அவளையும் மற்றவர்களையும்

அடுத்தி நாள் தமது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வரும்படி அழைத்தார். ஜெயபூரீ ! சுமதியை நீயே கூப் பிட்டுவிடு அம்மா! என்றார் பூரீதரன் வீட்டுக்குக் கிளம் பும் போது.

சுமதி அவசரமாக அவர் எதிரில் வந்து நின்றாள். பிறகு கணிரென்ற குரலில், டாக்டர் மாமா! அவள் என்னை அழைக்க இங்கே வரவில்லை' என்றாள்.

அங்கு நின்றிருந்தவர்கள் மனத்தில் பலவித குழப்பங் கள் ஏற்பட்டன. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூரீதரனும் அவளை வியப்புடன் பார்த்தார்.

""அவள்....வந்து... அவள்...பாலுவை பர்ஸ் ன லாக அழைக்க வந்திருக்கிறாள்! என்று கூறி விட்டு ஒட்டமாக மாடிப்படிகளில் ஏறிச் சென்று விட்டாள் சுமதி.

கன்னம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்கள் மருள ஜெயபூரீ தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள். டாக்டர் பூரீதரன் ஆசையுடன் தம் மகளை அணைத்தவாறு காருக்குள் சென்று உட்கார்ந்தார்.

அவர் மனம் காதலைப் பற்றி தீவிரமாக நினைக்க ஆரம்பித்தது. இப்படித்தான் ஒரு நாள் ராதாவும்.