பக்கம்:முத்துச் சிப்பி.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

மூர்த்தியைக் காதலிப்பதாகச் சொன்னாள். அந்தக் காதல் எப்பொழுது, எந்த இடத்தில், எந்தச் சமயத்தில் உதயமாகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடி யாது போலும் என்று நகைத்தார் அவர். தகாத இடத் தில் ஒரு ஜோடிக்கு முடிச்சுப் போட்டு வேடிக்கை பார்ப் பதில் பிரும்மாவுக்கு ஆசை. தகுந்த இடத்தில் காதலை வளர்த்துப் பிரித்து வைப்பதில் அவனுக்கு ஒர் ஆனந்தம் காதல் பாதையிலே வெற்றி கண்டவர்கள் அபூர்வம் : ரோமியோவும், ஜூலியட்டும், சகுந்தலையும் துஷ்யந்த னும், லைலாவும் கயலாம் அந்தப் பாதையின் கரடுமுரடு களை அனுபவித்து வெற்றியையும் கண்டவர்கள். ராதா முதலில் வெற்றியைக் காணவில்லை. தோல்வியைத்தான் கண்டிருக்கிறாள். ஜெயபூரீ எப்படியோ?" என்று நினைத் துக் கொண்டே காரைச் செலுத்திக் கொண்டு வந்தார்.

பேசாமல் திகைத்துப் போய் அருகில் உட்கார்ந்திருக் கும் தமது மகளைப் பார்த்து, 'அம்மா! ஜெயபூரீ! பாலு வை உனக்குப் பிடித்திருக்கிறதா? அவன் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி இருக் கின்றதே. அதன் பிறகு உங்கள் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று இருக்கிறேன்' என்றார்.

ஜெயபூரீ பதில் ஒன்றும் கூறவில்லை. மிகுந்த நாணத் துடன் தன் புடவைத் தலைப்பை முறுக்கியபடி உட்கார்ந்

திருத்தாள்.

இப்படித்தான் ரீதரனின் மனைவி பத்மா முதலில் அவருடன் பேசவும் தயங்கித் தலை குனிந்து நின்றிருந் தாள். அவர் மனம் பல வருஷங்களுக்கு முன்பு அவருடன் பழகிய மனைவியை மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. அந்த நிகழ்ச்சி, அந்த நாள் யாவுமே அவர் மனத்துள் பதிந்துபோன அழியா ஒவியமாகத் திகழ்ந்தது.