பக்கம்:முத்துச் சிப்பி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கல்யாணப் பேச்சு

நிலவின் அமுத வெள்ளத்தில் மூழ்கியிருந்த தோட் டத்தில் விருந்து நடைபெற்றது. அங்கங்கே வர்ணவிளக்கு கள் சுடர் விட்டன. ஆனால் கூட்டம் -அதாவது விருந் தினர்கள்-அதிகம் இல்லை. பவானியுடன் படித்தவர்கள் டாக்டர் காமாட்சி, இன்னும் சில முக்கியமான நண்பர் கள் மட்டுமே வந்திருந்தனர். ராதாதான் பெண்களை வரவேற்க நின்றிருந்தாள். உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த துயரத் தீயை அணைக்க முயன்று கொண் டிருந்தாள் என்றும் சொல்லலாம். அந்தப் பெண் ஊராருக்குப் பயந்துகொண்டு சில மாதங்கள் வெளியில் எங்குமே போகாமலிருந்தாள். படிப்படியாக அவள் மனம் மாற ஆரம்பித்தது. அவள் அப்படி வீட்டோடு அடைபட்டுக் கிடப்பதால், மூர்த்திபின் தரம் சமூகத்தின் கண்களில் உயர்ந்து காணப்படாது என்கிற உண்மையை ராதா புரிந்து கொண்டாள். அவன் புரிந்த குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். இனி தான் மட்டும் வீட்டி னுள் பதுங்கிக் கிடப்பதில் என்ன லாபம் என்று தீர் மானித்து ராதா அவ்வப் போது வெளியில் போய் வர ஆரம்பித்தாள். பவானிக்காக விருந்து நடப்பதை எண்ணி ராதா அகமலர்ச்சியுடன் அதில் கலந்து கொண் டாள்.

விருந்து அமர்க்களமாக நடந்தது. பவானிக்கு இவை யாவுமே புதுமையாக இருந்தன. சங்கோஜத்தி னால் அவள் குன்றிப் போனாள்.

கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து உட்கார்ந்திருந்த அவள் அருகில் காமாட்சி வந்தாள். அன்புடன் அருகில் உட்கார்ந்து, பவானி! நீங்களும் டாக்டரும் சம்பந்தி கள் ஆகப் போகிறீர்களாமே? என்று விசாரித்தாள்.