பக்கம்:முத்துச் சிப்பி.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 O

பவானி ஊருக்குப் போவதைப் பற்றி கோ மதி ஒருத்திக்கு மட்டும் துயரம் ஏற்படவில்லை. எல்லாருமே மனம் வருந்தினர்.

கடைசியாக பவானி, டாக்டர் பூரீதரனிடம் தான் ஊருக்குப் போய் வருவதாக அறிவித்துக் கொண்டாள்.

பூரீதரன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஒரு விநாடிக்குள் அவர் தன் னைச் சுற்றி இருப்பவர் களை மறந்தார். ஆழ்கடலுக்குள்ளே முழு கி எழுந்து முத்துக் குளிப்பவன் கையில் பலரகச் சிப்பிகள் கிடைக் கின்றன. அவற்றிலே ஒரு சிப்பிக்குள்ளிருந்து அழகிய முத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்புறம் அந்த முத்து சமூகத்திலே ஒர் உயர்ந்த ஸ்தானத்தை அடைகிறது.

சமூகத்தில் கணவனை இழந்தவர்கள். கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள், வாழ வகை தெரியாத

வர்கள், வாழ்க்கைச் சூதில் தம்மையே சூதாட்டக் காய் களாக வைத்து இழந்தவர்கள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டியவர்கள் தாம்.

அவர்களுக்கு உலக வாழ்வு இருண்டு போகாமல் இருக்க அநேக உழைப்பாளிகள் தேவை . அந்தத் தொண்டர்களின் உள்ளம் மாசு மரு வற்று இருக்க வேண்டும். தன்னுடையது என்கிற பற்று நீங்க வேண் டு ம். அவளுடைய கண்ணிரைத் துடைக்க அவர்கள் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். நோயிலும் துன்பத் திலும் இன்னல்களிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆற்றும் பணியே கடவுள் பணி என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய பல நல் முத்துக்களை இந்தப் பாரத நாடு ஈன்றிருக் கிறது. அவர்கள் தங்களை ப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் ஆழ் கடலின் கீழ் ஒளிந்து வாழும் முத்துச் சிப்பிகளைப் போல மறைந்து கிடக்கிறார்கள்.