பக்கம்:முத்துச் சிப்பி.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94

சுருண்ட கேசத்தையுடைய அந்த அழகிய வாலிபன் பெட்டிக்குள் வந்தான்.

"இவன்தான் அம்மா எனக்கு வரப்போகும் மரும

கன். அந்த அம்மாள்தான் இவன் தாய். அந்தப் பெண் என் தங்கை” " என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத் தார் டாக்டர்.

ரயில் கிளம்புவதற்கு அறிகுறியாக "கார்டு பச்சைக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆட்டினார். வெளியே

நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணிர் நிறைந்திருந்

தது. பவானி தன் கைகள் இரண்டையும் கூப்பி அனைவ ரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள். 1.

ரயில் வேகமாக நகரத் தொடங்கியது. மாம்பலம். சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கி மலை என்று ஊர்கள் நகர்ந்துகொண்டே வந்தன. தாம்பரத்தையும் தாண்டி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

என் எதிரில் உட்கார்ந்திருந்த பவானி என்னைப்

பார்த்து, ' ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலையாக இருக்கிறீர்களா? கையில் ஏகப்பட்ட காகிதங்களை

வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சை விடைத்

தாள்களா அவை? என்று கேட்டாள்.

நான் லேசாகச் சிரித்தேன்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதாவது இப்படி மன சில் தோன்றுவதை எழுதப் பார்க்கிறேன்: '

ான்றேன்.

பவானி சிறிது நேரம் ஏதோ யோசித்தாள். பிறகு ன் அருகில் வந்து உட்கார்ந்து, 'அம்மா! எனக்குத் தெரிந்த ஒர் அனுபவத்தைக் கூறுகிறேன். எழுதிப் பாருங்கள் என்றாள்.