பக்கம்:முத்துச் சிப்பி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

'மருமகன் பெரிய படிப்பு படிக்கிற மாதிரி தான் உன் எண்ணம். ஒண்ணாவது படிக்கிறவனுக்குப் புஸ்தகம் வாங்க நூறு ரூபாய் வேண்டுமா என் ன? ' "

பவானி இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் தர்க்கம் செய்து பேசுவது கோமதிக்குப் பிடிக்கவில்லை. புருஷன் போய் விட்டான். பிரமாதமாகச் சொத்து ஒன்றும் அவன் வைத்து விட்டுப் போகவில்லை. கூட வருவதற்கு ஆயிரம் ஆட்சேபணைகள் சொல்லிவிட்டாள். பள்ளிக் கூடம் திறந்தால் இருக்கட்டும் என்று பணம் கொடுத் தால் இது எதற்கு?’ என்கிறாள். கர்வம் பிடித்தவள் என்று நினைத்து கோமதி கணவனைக் கோபமாக விழித்துப் பார்த்தாள்.

இடையில் அடுத்த வீட்டிலிருந்து கல்யாணம் வந்தார். வந்தவர் பேசாமல் இருந்தாரா? அப்படி இருப்பதுதான் மனித சுபாவமே இல்லையே!

"என்ன லார்! ஊருக்குக் கிளம்புகிறீர்களா?' ' என்று கேட்டு வைத்தார்.

ஆமாம் லார்! வந்த வேலை ஆயிற்று. கிளம்ப வேண்டியதுதானே?' என்று சலிப்புடன் நாகராஜன் கூறினான்.

  • ஹாம்...ஊருக்குக் கிளம்புகிறீர்கள். ஆமாம்... ஆபீஸ் என்றும், வேலை என்றும் ஒன்று இருக்கிறதே. எத்தனை நாட்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியும்? அவரவர் வேலையை அவரவர் செய்தாக வேண்டுமோ இல்லையோ ஹாம்...'

தங்கையைத் தனியாக விட்டு விட்டுப் போகிறாயே அவளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டாம் நீ என்று கேட்பதற்குப் பதிலாக அவர் ஏதோ சுற்றி வளைத் துப் பேசுகிறார் என்பது கோமதிக் குப் புரிந்து போயிற்று.