பக்கம்:முத்துச் சிப்பி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O

அவரவர் வேலை யை அவரவர் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டு தானே மாமா செய்ய வேண்டும்? இன் னொரு இடத்தில் வந்து உட்கார்ந்து செய்ய முடியுமா? அதுவும் வியா:ாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நாள் கூட வெளியே போக முடியாது. பத்து தினங்களாக இங்கே இருந்ததே. மேல். இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது? என்று கேட்டு விட்டுக் கோமதி, அருகில் நின்று கொண்டிருந்த பவானியை ஒரு மாதிரியாகப் பார்த்த ள்.

இந்தப் பத்து தினங்களில் கல்யாணம் கோமதியின் சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். வீட்டிலே பிறந்த பெண், மணத்தை இழந்து வாடும்போது தன்னு டைய சுகத்தில் ஒன்றும் குறைவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள் கோமதி.

கல் ய னராமன் கோமதிக்கு ஒன்றும் பதில் கூற வில்லை. அவருடைய சிந்தனை வேறு எங்கோ லயித்துக் கிடந்தது. உ. ம்றாரும் உறவினரும் இருந்தும், ஒரு பெண் ணுக்கு தனிமை என்பது எப்பொழுது ஏற்படுகிறது என்று சிந்திப்பதில் முனைந்திருந்தார் அவர் . உடன் பிறந்த அண்ணனும், பெற்று வளர்த்த பெற்றோரும் இருந்தால்கூட. கட்டிய கணவன் இல்லாமல் போகும் போது அவள் தனிமையில் சிக்கி வாடுகிறாள்.

ஒரு பெரிய நந்தவனம். அதில் மல்லிகை, இரு வாட்சி. ரோஜா, கன காம்பரம், மருக்கொழுந்து முதலிய மலர்ச் செடிகள் நிறைந் திருக்கின்றன. தோட்டக்காரன் ஒரு முல்லைக் கெ: டியை நட்டுப் பயிர் செய்கிறான். கொடி யும் செழித்து வளர ஆரம்பிக்கிறது . கப்பும் கிளைகளு

H == --- + - ཁོ་ཟ, - மாகப் புதருடன் மண்டி வளருகிறது. அப்பொழுதெல் லாம் தோட்டக்காரன் கவலைப்படுவதில்லை. எல்லாச் செடிகளை யும் போலச் செழுமையாக வளருகிறது. என்றே நினைத்து ஆறுதல் அடைகிறான்.