பக்கம்:முத்துச் சிப்பி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

கிறார். மனதிலே ஆறுதலும் திருப்தியும் அடைகிறார் கள் பெற்றோர்.

ஆனால் முல்லைக் கொடிக்கு ஆதாரமாக ஊன்றிய கொழு கொம்பை ஒரு பேய்க்காற்று. புயல், சூறாவளி அலைக்கழித்துத் தரையில் சாய்த்து விட்டுப் போய் விடு கிறது. முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பில்லாமல் தவக்கிறது. காற்றிலே ஊசலாடுகிறது.

இதைப் போலத்தான் இருக்கிறது. பவானியின் வாழ்க்கை என்கிற தீர்மானத்துக்குக் கல்யாணராமன் வந்த போது, கூடத்தில் நின்றிருந்த கோமதியைக் காணோம். அவள் வண்டியில் போய் ஏறிக் கொண்டு விட்டாள். நாகராஜன் மட்டும் அவர் அருகில் நின்றிருந் தான்.

'ஊருக்குப்போய்விட்டு வருகிறேன் மாமா. பவானி யைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமானால் அவ ளைப் பற்றி எனக்கு ஏதாவது செய்தி இருந்தால் தெரி விக்க அஞ்சாதீர்கள்' என்று அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டான்.

தமையனும் மன்னியும் ஏறிச் செல்லும் வண்டி தெருக் கோடியைத் தாண்டிப் போகும் வரையில் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் பவானி. அவள் அருகில் வந்து நின்ற பார்வதியைச் சிறிது நேரம் பவானி கவனிக்க வில்லை.

"பவானி! என்ன அப்படி ஒரேயடியாக எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அன்புடன் கேட்டு அவள் சிந்தனையைக் கலைத்தாள் பார்வதி.

7. மூர்த்தி வருகிறான் !

அவள் கண் எதிரே சுவரில் காணப்பட்ட அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் மனத்துள் எத்தகைய