பக்கம்:முத்துச் சிப்பி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 *

போது நான் போய் டீ வாங்கி வந்து கொடுப்பேன். கிளாஸிலே பானைத் தண்ணிர் பிடித்து வைத்து கண் ணாடித் தம்ளரை அலம்பி சுத்தமாக வைப்பதும் நான் தான். நம் வீட்டிலிருந்து உனக் குத் தெரியாமல் இரண்டு ஏலக்காய்களை எடுத்துப்போய்த் தட்டி அதிலே போட்டு வைத்து விடுவேன். நல்ல பங்குனி மாசத்து வெயில் வேளையிலே ஏலக்காய் போட்ட ஜலத்தை சாப்பிட்டு என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார் கள் . கவனித்து 1 மார்க்குகள் போடுவார்கள் அம்மா!'

பவானிக்கு மகிழ்ச்சியும் கோபமும் போட்டி போட் டுக் கொண்டு ளெம்பின. 'இந்தப் பிள்ளை இப்படிப் படிப்பில் அக்கறை இல் லாமல் தண்ணி ரிலே ஏலக்காய் போட்டு உபாத்தியாயர்களிடமிருந்து மார்க்கு வாங்கப் பிரயாசைப் படுகிறானே ! உண்மையிலே உழைத்துப் படித்தால் பாலு என் வளவு கெட்டிக்காரனாக இருப் பான்?' என்று நினைத்து வேதனைப் பட்டாள் அவள்.

தாயின் முகத்தில் தேங்கிநிற்கும் கவலையைப் பார்த் ததும் பாலு, 'அம்மா! கட்டாயம் நான் பாஸ் பண்ணி விடுவேன் அம்மா. அடுத்த தடவை என்னை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போகிறாய்?' என்று கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந் தான்.

அவள் பதில் கூறுவதற்குள் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் வந்து அழைத்தார்கள். பாலு விளையாடு வதற்காக வெளியே எழுந்து சென்றான்.

முற்றத்து வெயில் தாழ்வாரத்தில் ஏறி வந்து கொண் டிருந்தது. பவானி குளித்துச் சமையல் செய்வதற்காக கொல்லைப்புறம் போக ஆரம்பித்தவள் தெருக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நின்றாள்.

வாசல் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதின னான வாலிபன் ஒருவன் வந்தான். நல்ல உயரமும்,