பக்கம்:முத்துச் சிப்பி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5

டுெ க்கான பார்வையும், எடுப்பான நாசியும், அது காண காற்றமுமுடைய அவன் அவளைப் பார்த்ததும் புன் விரிப்புடன், 'கல்யாணராமன் வீடு இதுதானே? டில்லி யில் "அக்கொண்ட்ஸ் ஆபீசில் இருந்து ரிடையர் ஆன வl . அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட் டான் .

பவானி சிறிது நேரம் தயங்கி |தா ன க , ' இதுவும் அவர் வீடுதான். 5: T ல் அவர் இங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார். இங்கே நாங்கள் குடியிருப்பவர்கள் என்று கூறினாள்.

தி ன் , ாள் . பி .リ@

f

r

'ஒ1 ஐஸி! அதுவும் மாமாவின் விடுதானா? பக் கத்து வீட்டை யும் வாங்கி விட்டார் போலிருக்கிறது. நான் இந்தப் பக்கம் வந்து ஆறேழு வருஷங்கள் ஆயிற்று. என் தாயார் அவருடைய கூடப் பிறந்த தங்கை. அவள் போன அப்புறம் மாமாவை நான் பார்க்கவேயில்லை என்று வந்திருந்த இளைஞன் பேசிக்கொண்டே நின்றான்.

பவானிக்கு என்னவோ போல் இருந்தது. அவளுக்கு இப்படியெல்லாம் பிறரிடம் பேசிப் பழக்கம் இல்லை. நெஞ்சில் உறுதியும், தைரியமும் வாய்ந்தவளாக இருந் தாலும் நடைமுறையில் அவள் வெகு சங்கோஜி. கட்டிய கணவனிடமே அவள் மனம் விட்டுப் பழகப் பல மாதங் கள் ஆயிற்று. ஆகவே தயக்கத்துடன் அவனைப் பார்த்து 'இப்படி பெஞ்சியில் உட்காருங்கள். நான் போய் உங்கள் மாமாவையும் மாமியையும் அழைத்து வருகி றேன்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வந்திருந்த இளைஞன் வெகு சுவாதீனமாகப் பெஞ்சி யில் வந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு, நோ! நோ! அனாவசியமாக உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போகிறேன்' என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். அதற்குள் பவானி கொல்லைப்புறம் சென்று பார்வதி அம்மாளையும் கல்யாணராமனையும் அழைத்து வந் தாள.