பக்கம்:முத்துச் சிப்பி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5

பார்வதி அம்மாள் ஒரு நிமிஷம் தயங்கியபடி அவ. னைப் பார்த்தாள். 'சட் டென்று புரிந்து கொண்டவள் போல், 'யார்? மூர்த்தியா? எப்போடா வந்தே என்று கேட்டாள்.

கல்யாணராமன் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வீட்டிற்கு வந்தவனுடன் பேசாமல் இருந்தால் நன் றாக இருக்காது என்கிற காரணத் தினாலோ என்னவோ, * மூன்று வருவு மாக உன்னிட மிருந்து கடிதமே வரவில் லையே! எங்கே. என்ன பண் ணிக் கொண்டிருந் தாய்?" என்று கேட்டார்.

மூர்த்தி, சுருள் சுருளாக வாரி விடப்பட்ட தன் கிராப் தலையைத் தடவிக் கொண்டான்.

உண்மையைச் சொல்லுவதா அல்லது அத்துடன் கற்பனை யையும் கலந்து சரடு திரிப்பதா என்பது புரியா மல் சிறிது நேரம் யோசித்தான். அப்புறம் ஏதோ தீர் மானத்துக்கு வந்தவன் போல் பம்பாயில் க. பாதேவி யில் ஒரு பெரிய துணிக்கடையில் மானேஜராக இருந் தேன் . அவர்கள் தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி புதிசாகக் கடை திறந்தால் வியாபாரம் நடக்கு மா என்று பார்த்து வர அனுப்பியிருக்கிறார்கள் என்றான்.

'ஒஹோ அப்படியா? சந்தோஷம் அப்பா. உன் அம்மா இருக்கிற வரைக்கும் தான் நீ எதிலும் நிலைக் காமல் சுற்றிக் கொண்டிருந்தாய். வகையாகக் கண் ணி யமாக என் பிள்ளை இருக்கப்போகிறானா? என்று அவள் என்னிடம் சொல்லி அரற்றிக் கொண்டே இருந் தாள். இனிமேலாவது ஒழுங்காக இருந்தா யானால் சரி என்று கூறிவிட்டுக் கல்யாணராமன் வீட்டுக்குப் போக எழுந்தார்.

மூர்த்தியின் முகம் வாட்டமடைந்தது. யாரோ முன் பின் தெரியாத ஒடு பெண் எதிரில் LD ПГ I О т