பக்கம்:முத்துச் சிப்பி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

ஆனால் மூர்த்தி ஒரு சீர்திருத்த வாதியோ உன்னத வட்யெங்களுக்கு இருப்பிடமானவனோ அல்ல. கிராமத் நல. வாய்க்காலிலிருந்து அவன் மாமா வீடு வரையில் மாறவே இல்லையே என்று நினைத்துத்தான் அவன் வியப்பில் ஆழ்ந்து போனான்.

இந்த யோசனையுடன் அவன் கொல்லைத் தாழ்வாரத்தைத் தாண்டி வரும் போது வாசற்படியில்

வங் கென்று தலையில் இடித்துக் கொண்டான்.

தலையில் இடித்துக் கொண்டாயாடா மூர்த்தி? குளிர், து வரமாட்டாயோ?" என்று கேட்டுக் கொண்டே பர்வதி சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

ஊர்தான் மாறவில்லை என்றால் வீட்டையாவது மாற்றிக் கட்ட மாட்டீர்களோ? வாசற்படிகளையாவது இடித்துப் பெரிதாக வைக்கமாட்டீர்கள்?' என்று சொல் விக்கொண்டே மூர்த்தி சமையல் அறையில் போய் உட் கார்ந்தான்.

அவன் எதிரில் வாதாம் இலையைப் போட்டு முறுகலாக நாலு தோசைகளை வைத்தாள் பார்வதி அம்மாள். அதற்கு மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் போட்டுவிட்டு அவன் அருகில் மணையின் மேல் உட்கார்ந்தாள்.

ஊர் ஊராக ஒட்டல்களில் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த மூர்த்திக்கு இந்தத் தோசையும் காப்பியும் அமிருதமாக இருந்தது.

இப்படி நான் ஹோம் லியாகச் சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று மாமி' என்று பரம திருப்தியுடன் சொன்னான் மூர்த்தி.

  • அதென்னடா அது? என்னவோ எலி, பூனை என்று பேசுகிறாயே, பம்பாயிலே எலி உபத்திரவம் அதிகமா