பக்கம்:முத்துச் சிப்பி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 O

என்ன?' ' என்று கேட் டாள் பார்வதி அம்மாள். மூர்த்தி "கட கட’ வென்று சிரித்தான்.

அவன் சிரித்து முடிப்பதற்குள் கல்யாணம் இதைக் கேட்டுக் கொண்டு உள்ளே வந்தார்.

நம் வீட்டு மச்சில் பூனைக்குட்டிகள் இருக்கின்றனவே, அதிலே ஒன்றை அவன் பம்பாய் போகும்போது கொடுத்து அனுப்பு: '

கணவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்து விட்டு அவள்,

மூர்த்தி! உன் மாமா ஏதாவது கொஞ்சமாவது மாறி இருக்கிறாரா. பார்த்தாயா? அதே பேச்சு, அதே பரிகாசம் இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார் என்றாள்.

உன் மாமி மட்டும் ரொம்ப மாறி இருக்கிறாளோ? அப்படியே சின்னப்பெண் மாதிரி ஒடிசலான உடம்பும், படிப்படியான கூந்தலும், அப்படியே இருக்கிறாள். அன்று கழுத்திலே மூன்று முடிச்சுகள் போட்டு விட்டு அவளைப் பார்த்தபோது எப்படி என்னைப் பார்த்து முறுவலித் தாளோ அப்படியே இருக்கிறது இன்றும் அவள் ஒரிப்பது என்று கல்யாணம் தம் மனைவியைப் பற்றிப்

பேசிப் புகழ்வதில் ஈடுபட்டார்.

"ஆமாம், அங்கே எலிகள் உபத்திரவம் அதிகம்தான்

தெருவிலே ஒரே இரைச்சல் கேட்டது. பெரியவர்

களும், பெண்களும், குழந்தைகளுமாக எல்லோரும் சேர்ந்து ஏகமாகச சத்தம் போட்டார்கள். கல்யாண ராமன் உள்ளே யிருந்து வெளியே வந்தார். மூர்த்தியும் என்ன இரைச்சல் என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தான். அங்கே பெரியவர்களாக ஆண்களில் நாலு பேர்